சிங்கப்பூரை நாடும் சீனாவின் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள்

சிங்கப்பூரை நாடும் சீனாவின் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள்

1 mins read
5793312d-7f3a-4912-b374-8839f6f3ff17
சிங்கப்பூரில் செயல்படுவதன் மூலம் அனைத்துலக முதலீட்டாளர்களையும் வாடிக்கையாளர்களையும் ஈர்க்க முடிவதாக நிறுவனங்கள் நம்புகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சீனாவில் தொடங்கப்படும் பல செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தற்போது சிங்கப்பூரை பெரிய அளவில் நாடிவருவதாக ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் செயல்படுவதன் மூலம் அனைத்துலக முதலீட்டாளர்களையும் வாடிக்கையாளர்களையும் ஈர்க்க முடிவதாக நிறுவனங்கள் நம்புகின்றன.

மேலும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுடன் சீனாவுக்கு வர்த்தகப் பூசல் இருப்பதால் சிங்கப்பூரில் இருந்து செயல்படுவதன் மூலம் சீன நிறுவனங்கள் பல வர்த்தக நலன்களை பெறுவதாக ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ குறிப்பிட்டது.

தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு உலக அளவில் அதிக தேவை எழுந்துள்ளதால் பல புதிய நிறுவனங்கள் போட்டிப்போட்டிக்கொண்டு தென்கிழக்கு ஆசியாவில் தடம்பதிக்க விரும்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுசீனாசிங்கப்பூர்