ஏறக்குறைய $2 மில்லியன் மதிப்புள்ள காப்பீட்டு முதலீட்டுத் திட்டங்களை வாங்குவதற்காக பெரும் கடன் வாங்கிய ஓய்வு பெற்ற நபர் ஒருவர் பேரிழப்பைச் சந்தித்துள்ளார்.
அவருக்கு வயது 67. தனது மாதாந்திர செலவுகளைச் செலுத்தக்கூடிய ஒரு நல்ல முதலீட்டுத் திட்டத்தை தற்செயலாகக் கண்டுபிடித்ததாக அவர் நினைத்தார்.
அவரது வங்கியின் மேலாளர் ஒருவர், ஒற்றைத் தவணை கொண்ட காப்பீட்டுத் திட்டத்திற்காக 70 விழுக்காடு வரை கடன் வாங்கலாம் என்று கூறியிருந்தார்.
இதனால் ஒரு மில்லியன் மதிப்புள்ள முதலீட்டுத் திட்டத்தில் அவர் $300,000 செலுத்தினார். எஞ்சிய $700,000 வெள்ளிக்கு அவர் கடன் வாங்கி செலுத்தியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் தெரிவித்தது.
ஓய்வு பெற்றவர் தனது மாதாந்திர ஊதியத்தைப் பெறுவதற்கும், தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் இந்தத் திட்டம் அதிக லாபத்தை ஈட்டும் என்று அவர் நம்பினார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்ற கடன் ஏற்பாட்டில் 2வது முறையாக ஒரு மில்லியன் வெள்ளி காப்புறுதியை அவர் எடுத்தார். இதற்காக அவர் மேலும் $700,000 கடன் வாங்கினார். இந்த நிலையில் அதிகரித்து வரும் வட்டி செலவுகளை அவரால் சமாளிக்க முடியவில்லை.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, $1.4 மில்லியனுக்கும் அதிகமான மொத்தக் கடன், இரண்டு காப்புறுதிகளுக்காக பெறப்பட்ட தொகைக்கான வட்டி செலவுகளை ஈடுகட்ட முடியாததால் அவர் நெருக்கடியில் சிக்கினார்.
இந்த நிலையில் இரண்டு காப்புறுதி திட்டங்களையும் அவர் கைவிட நேர்ந்தது.
தொடர்புடைய செய்திகள்
இறுதியில் அவரது ஆரம்ப சேமிப்பில் பெரும் பகுதியை அவர் இழந்தார்.
அதிர்ஷ்டவசமாக, தனது இழப்புகளில் சிலவற்றை ஈடுகட்டும் தனது வழக்கை நிதித் தொழில்துறைக்கான சர்ச்சைகள் தீர்வு நிலையத்தில் (FIDReC) வெறும் 50 வெள்ளிக் கட்டணத்தில் தீர்க்க முடியும் என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
நிதித் தொழில்துறைக்கான சர்ச்சைகள் தீர்வு நிலையத்தின் அண்மைய ஆண்டு அறிக்கையில் இந்த வழக்குப் பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. எந்தவொரு முதலீட்டிற்கும் கடன் வாங்குவதால் ஏற்படும் கடுமையான விளைவுகளை அது விளக்கியிருந்தது. சந்தை மாற்றங்கள் காரணமாக மூலதனத்தை இழப்பதோடு அதிக வட்டி, கடனில் சிக்கிக்கொள்ள வைத்துவிடும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியது.

