சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் ஓராண்டில் காணாத உச்சம்

சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் ஓராண்டில் காணாத உச்சம்

1 mins read
a2e2a3bc-e413-4d67-9d11-45c51d633b37
2024ல் ‘ஏ’ பிரிவு கட்டணம் $100,000ஐ தாண்டியிருப்பது இதுவே முதன்முறை. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் புதன்கிழமை (அக்டோபர் 9) ஏற்றம் கண்டன. குறிப்பாக, சிறிய கார்களுக்கான கட்டணங்கள் ஓராண்டில் காணாத உச்சம் தொட்டன.

சிறிய, குறைந்த ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான ‘ஏ’ பிரிவு கட்டணம் $103,799ஆக இருந்தது. செப்டம்பர் 18ஆம் தேதி நடந்த இதற்கு முந்தைய ஏலக்குத்தகையில் பதிவான $98,524 கட்டணத்தைவிட இது 5.4 விழுக்காடு அதிகம்.

2023 அக்டோபருக்கு ($106,000) பிறகு ‘ஏ’ பிரிவில் கட்டணம் இந்த அளவு உயர்ந்திருப்பது இதுவே முதன்முறை. அதுவும், 2024ல் கட்டணம் $100,000ஐ தாண்டியிருப்பதும் இதுவே முதன்முறை.

பெரிய, கூடுதல் ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான ‘பி’ பிரிவு கட்டணம் 5.5 விழுக்காடு அதிகரித்து $116,002 ஆனது.

பொதுப் பிரிவு (‘இ’ பிரிவு) கட்டணம் 2.6 விழுக்காடு கூடி $116,000ஆகப் பதிவானது.

வர்த்தகப் பிரிவு (‘சி’ பிரிவு) கட்டணம் 1.4 விழுக்காடு அதிகரித்து $75,009ஆக இருந்தது.

மோட்டார்சைக்கிளுக்கான (‘டி’ பிரிவு) கட்டணம் 1 விழுக்காடு ஏற்றம் கண்டு $10,001 ஆனது.

குறிப்புச் சொற்கள்