தோ பாயோவில் சாலைத் தடுப்பில் மோதிய கார்: மதுபோதையில் ஓட்டுநர்

தோ பாயோவில் சாலைத் தடுப்பில் மோதிய கார்: மதுபோதையில் ஓட்டுநர்

1 mins read
8156d6d7-7c0e-4335-bab2-39140bce73f6
சாலை நடுவே இருந்த தடுப்புக் கம்பியை மோதிய நிலையில் வெள்ளை நிறக்காரின் புகைப்படம். - படம்: SGRV FRONT MAN/FACEBOOK
Google News Preferred Icon

மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய சந்தேகத்தின்பேரில் தோ பாயோவில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) அதிகாலை 62 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். அன்றைய தினம் அதிகாலை 3.10 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

கட்டுப்பாட்டை இழந்து அந்தக் கார் தோ பாயோ லோரோங் 6ஐ நோக்கிய லோரோங் 1ல் உள்ள சாலைத் தடுப்பை மோதி நின்றது என்று காவல்துறை விவரித்தது.

ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படத்தில் சாலை நடுவே இருந்த தடுப்புக் கம்பியை மோதிய நிலையில் வெள்ளை நிறக்கார் நிற்பது தெரிகிறது.

சுயநினைவோடு இருந்த அந்தக் கார் ஓட்டுநர் மருத்துவமனைக்கு சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்குக் காவல்துறையால் பிறகு கைது செய்யப்பட்டார்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
மதுபோதைவாகனம்ஓட்டுநர்கைதுகாவல்துறைதோ பாயோ