பாலஸ்டியர் ரோடு பெட்ரோல் நிலையத்தில் தீப்பிடித்துக்கொண்ட கார்

பாலஸ்டியர் ரோடு பெட்ரோல் நிலையத்தில் தீப்பிடித்துக்கொண்ட கார்

1 mins read
c86ffd35-3940-4442-9beb-9eedc081bfae
சம்பவம் கால்டெக்ஸ் பெட்ரோல் நிலையத்தில் நிகழ்ந்தது. - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

பாலஸ்டியர் ரோட்டில் உள்ள கால்டெக்ஸ் பெட்ரோல் நிலையத்தில் கார் ஒன்று தீப்பிடித்துக்கொண்டது.

அதனால் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) அந்நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.

542 பாலஸ்டியர் ரோட்டில் மூண்ட தீ குறித்து செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அது அவ்வாறு பதிலளித்தது.

தீயணைப்புத் தெளிப்பான்களைக் கொண்டு காரின் இயந்திரப் பகுதிக்குத் தொடர்புடைய அந்தத் தீ அணைக்கப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

தகவல் தெரிந்தவுடன் தங்கள் குழு உடனடியாக அவசரநிலை நடவடிக்கைகளைச் செயல்படுத்தியதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் உதவியோடு தீ அணைக்கப்பட்டதாகவும் ‌ஷெவ்ரோன் சிங்கப்பூர் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

“சம்பவ இடத்தில் எல்லா கருவிகளும் நன்கு செயல்படக்கூடிய நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அந்த நிலையம் மறுபடியும் செயல்படத் தொடங்கியது,” என்று அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தீ ஏற்பட்டதற்கன காரணத்தை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தீசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை