புகையிலைப் பொருள்கள் வாங்க இனிக் கூடுதலாக 20% வரி செலுத்த வேண்டும்

புகையிலைப் பொருள்கள் வாங்க இனிக் கூடுதலாக 20% வரி செலுத்த வேண்டும்

1 mins read
ac8f9f74-18eb-4832-9c97-64558f5e3180
புகையிலைப் பொருள்களுக்கு 20% கூடுதல் வரிவிதிப்பு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

புகையிலைப் பொருள்களுக்கு 20 விழுக்காடு கூடுதல் வரிவிதிப்பு நடப்பாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த வரி உடனடியாக, அதாவது வியாழக்கிழமை (பிப்ரவரி 12) நடப்புக்கு வருவதாக அறிவித்த பிரதமர், புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டைக் குறைப்பது இந்த அறிவிப்பின் நோக்கம் என்று தெரிவித்தார்.

வரி உயர்வைத் தொடர்ந்து புகைபிடிப்பவர்கள் தற்போது சிகரெட் ஒன்றுக்கு 58.9 காசு செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் இது 49.1 காசாக இருந்தது. இத்தகவலை நிதி அமைச்சு அளித்தது.

கடந்த 2022 முதல் 2024ஆண்டுகளுக்கிடையேயான புள்ளிவிவரங்கள், புகையிலை வரிகளிலிருந்துப் பெறப்பட்ட ஆண்டு வருவாய் $1 பில்லியன் தொகையைத் தாண்டியுள்ளது என்பதை சுட்டின.

புகையிலை வரி கடைசியாக 2023ஆம் ஆண்டில் 15 விழுக்காடு உயர்த்தப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
புகையிலைBudget 2026பட்ஜெட் 2026நாடாளுமன்றம்PM WONG