விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இளையருக்கு $3,500 அபராதம்

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இளையருக்கு $3,500 அபராதம்

1 mins read
419efc00-eaf4-42a5-ba97-c86c36b4314c
22 வயது அஸிம் ‌‌‌ஷா அபுபக்கர் ‌‌‌ஷா. - படம்: சின் மின் நாளிதழ்

சிங்கப்பூரிலிருந்து அபுதாபிக்குப் புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளையருக்குத் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 6) $3,500 அபராதம் விதிக்கப்பட்டது.

அபாயகரமான பொருள் குறித்து போலியான தகவலைக் கொடுத்ததற்காகத் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 22 வயது அஸிம் ‌‌‌ஷா அபுபக்கர் ‌‌‌ஷா ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூரரான அஸிம், பிப்ரவரி 14ஆம் தேதி எத்திஹாட் விமானத்தில் இருந்தபோது ‘ஃபுரூட்லூப்ஸ்19’ (fruitloops_19) என்ற தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து பதிவிட்டதாக நம்பப்படுகிறது என நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

“விமானத்தை வெடிவைத்து தகர்க்கப்போகிறேன் என்று எவருக்கும் தெரியாது,” என்று ஆடவர் குறிப்பிட்டதை 16 பேர் பார்த்ததாகவும் கூறப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து இரவு 7.20 மணியளவில் இன்ஸ்ட்கிராம் உரிமையாளரான மெட்டா நிறுவனத்தின் சட்ட அமலாக்க அதிகாரி ஒருவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

பதிவு வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் விமான நிலையக் காவல்துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அஸிமை அடையாளம் கண்டு, அவர் அபுதாபிக்குப் புறப்படவிருக்கும் விமானத்தில் இருப்பதை உறுதிசெய்தனர்.

ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த விமானம் பறக்கவிருந்தபோது சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்திற்குத் திரும்ப அழைக்கப்பட்டது. அதையடுத்து அஸிம் கைதுசெய்யப்பட்டார்.

அஸிமிடம் ஆபத்தான பொருள்கள் இல்லை என்றும் வெடிகுண்டு மிரட்டலை நிறைவேற்றுவதற்கு எந்த வழியும் இல்லை என்றும் பின்னர் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்