வானிலையைக்கூட பணையம் வைக்கும் தடை செய்யப்பட்ட சூதாட்டத் தளம்

வானிலையைக்கூட பணையம் வைக்கும் தடை செய்யப்பட்ட சூதாட்டத் தளம்

1 mins read
கட்டுப்பாடற்ற வகையில் பணையம் வைக்கப்படுவதால் அத்தளங்களை சிங்கப்பூர் தடைசெய்துள்ளது
a3a87b27-2a93-42ce-ab70-94b07516f9cb
சிங்கப்பூரின் வானிலை ஆக அதிகமாக எந்த அளவு இருக்கும் என்பதைக்கூட ‘பாலிமார்கெட்’ என்ற தடை செய்யப்பட்ட பந்தயம் கட்டும் இணையத் தளத்தில் மக்கள் கணித்து பணையத்தொகையை முன்வைத்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இணையத்தில் மிகப் பிரபலமாக இயங்கும் ‘பாலிமார்கெட்’, ‘கால்ஷி’ போன்ற மக்கள் பலவற்றைக் குறித்து பந்தயம் கட்டும் சூதாட்டத் தளங்களை கடந்த 2024ஆம் ஆண்டில் உலகிலேயே முதன்முதலில் தடை செய்த நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

சிங்கப்பூரின் சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் அந்த நடவடிக்கையை எடுத்தது. ஏனெனில் கட்டுப்பாடு இல்லாமல் அவற்றில் அனைத்துலக விளையாட்டுப் போட்டி முடிவுகளுடன் அரசியல் நிகழ்வுகளும் இயற்கை சார்ந்த நிகழ்வுகளும் பணையம் வைக்கப்படுகின்றன.

சிங்கப்பூரின் ஆக அதிகமான வானிலை வெப்ப அளவு குறித்தும் அந்தத் தளத்தில் அண்மையில் பணையம் வைக்கப்பட்டது. ஹாங்காங் முதல் அமெரிக்க நகரான நியூயார்க் வரையில் அத்தளத்தில் மக்கள் அந்தந்த நாடுகளின் வெப்பநிலை குறித்த கணிப்புகளையும் பந்தயம் கட்டினர்.

இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கிய இந்த சிங்கப்பூர் வானிலை குறித்த கணிப்புப் பந்தயத்தில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி மட்டும் S$330,000 (US$260,000) வரை பந்தயப் பணம் முன்வைக்கப்பட்டது.

‘வெதர் அன்டர்கிரவுன்ட்’ என்ற தனியார் வானிலை மையத்தைக் கொண்டு கணிக்கப்பட்டதில் அன்றைய சிங்கப்பூர் வானிலை  34 டிகிரி செல்சியஸ் என்றிருந்தது. வெள்ளியாளர் விவரம் வெளியிடப்படவில்லை.

உலக நாடுகளில் சிங்கப்பூர்,பிரான்ஸ், போர்ச்சுகல், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து உள்பட 33 நாடுகள் கணிப்புப் பந்தய இணையத் தளங்களைத் தடை செய்துள்ளன.

குறிப்புச் சொற்கள்