பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் வங்கிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள்

பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் வங்கிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள்

2 mins read
60566717-1d77-4ba6-88d9-f72985e6a716
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்திலுள்ள அலுவலக இடங்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேலானவற்றில் வங்கிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இயந்திர மனிதனை உருவாக்கும் நிறுவனமான ‘டிகன்ஸ்டிரக்ட்’ பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் இவ்வாண்டு முதன் முதலாக அமையவுள்ள நிறுவனங்களில் ஒன்று என்ற தகுதியைப் பெறுகிறது.

அந்த நிறுவனம் பொங்கோல் வட்டார முகப்பு, விநியோக சேவை மற்றும் கண்காணிப் பணிக்கு இயந்திர மனிதர்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

பொங்கோல் வட்டாரத்தின் திறந்தவெளி மின்னிலக்கத் தளம் டி கன்ஸ்டிரக்ட் போன்ற நிறுவனங்களை அங்கு வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது. அந்தக் குடியிருப்புப் பேட்டை முழுவதும் இயந்திர மனிதர்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அனைத்து விதமான உணர் கருவிகளையும் ஒன்றாக இணைத்து அவற்றைக் கட்டுப்படுத்தி, பயன்படுத்த ஏதுவான கணினி அமைப்பு முறை உள்ளதே அதற்குக் காரணம்.

இதற்கு உதாரணமாக ‘ஐஓஎஸ்’, ‘ஆண்டிராய்ட்’ போன்ற வெவ்வேறு கைத்தொலைபேசி முறைகளுக்கு வேறுவேறு செயல்முறைகளை பயன்படுத்த வேண்டியிருப்பதுபோல் பொங்கோல் வட்டாரத்தில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு தேவையில்லை.

பொங்கோல் வட்டாரத்தில் 70 காற்பந்து திடல்கள் பரப்பளவில் எட்டு புளோக்குகள் உள்ளன. இங்குள்ள திறந்தவெளி மின்னிலக்கத் தளம் இயந்திர மனிதர்கள் மின்தூக்கிகள், நுழைவாயில் தடுப்புகளை இயக்கும் திறன் பெற்றிருப்பதுடன், பொருள் விநியோகம் செய்வது, துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவது பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என அனைத்தையும் கையாளக்கூடியவை.

“பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்துக்கு இடம்பெயர்வதை தவிர்க்க முடியாது. சிங்கப்பூரில் வட்டார அளவில் இதுபோன்ற தொழில்நுட்ப வசதி எங்கும் இல்லை,” என்று கூறுகிறார் டிகன்ஸ்டிரக்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சின் லிம்.

இவரது நிறுவனம் தற்பொழுது ஒன்-நார்த் என்ற இடத்தில் அமைந்துள்ளது. அந்த நிறுவனம் பொங்கோல் வட்டாரத்துக்கு எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இடம் பெயரவுள்ளது.

அறிவார்ந்த தொழில்நுட்பத்துக்கு சிகரமாக விளங்கும் அமெரிக்காவின் சில்லிகான் பகுதிக்கு ஈடாக இருப்பதாகக் கூறப்படும் பொங்கோல் மின்னிலக்க வட்டாரம் டிகன்ஸ்டிரக்ட் போன்ற பல நிறுவனங்களை தன்னுள்ளே ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம்.

குறிப்புச் சொற்கள்