அனைத்துக் கட்டுமானத் திட்டங்களுக்கும் உதவி வேண்டும்: சிங்கப்பூர்க் குத்தகையாளர் சங்கம்

அனைத்துக் கட்டுமானத் திட்டங்களுக்கும் உதவி வேண்டும்: சிங்கப்பூர்க் குத்தகையாளர் சங்கம்

1 mins read
d2185c61-199c-4c68-b0e1-785647aae0c3
ஒட்டுமொத்த கட்டுமானச் செலவுகளில் 15 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடுவரை எரிபொருளுக்குச் செல்வதாகக் கட்டுமானக் குத்தகையாளர்கள் தெரிவித்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பொதுத் துறையிலும் தனியார்த் துறையிலும் உள்ள திட்டங்களைச் செயல்படுத்தும் கட்டுமான குத்தகையாளர்களுக்கு அரசாங்கத்தின் உதவி தேவை என்று சிங்கப்பூர்க் குத்தகையாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

உலக அளவில் எரிபொருள் விலைகள் அண்மை வாரங்களில் 200 விழுக்காடுக்கும்மேல் அதிகரித்துள்ளதைச் சங்கம் சுட்டியது.

முக்கியமான பொதுத் துறை திட்டங்களுக்கு மட்டுமின்றி தனியார்த் துறைத் திட்டங்களுக்கும் உதவிசெய்யும்படி அரசாங்கத்துடன் கலந்துரையாடி இருப்பதாய் சங்கத்தின் தலைவர் லீ கேய் சாய் கூறினார்.

ஒட்டுமொத்த கட்டுமானச் செலவுகளில் 15 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடுவரை எரிபொருள் தொடர்பானவற்றுக்குச் செலவாகிறது என்று திரு லீ கூறினார்.

ஒவ்வொரு கட்டுமானத் திட்டத்தையும் பொருத்து சில நேரங்களில் எரிபொருளுக்குக் கூடுதலாகச் செலவு செய்யவேண்டியிருப்பதையும் அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்