அனைத்துலக நீர்வழி உரிமைகளை ஆசியான் கட்டிக்காக்க வேண்டும்: பிரதமர் வோங்

அனைத்துலக நீர்வழி உரிமைகளை ஆசியான் கட்டிக்காக்க வேண்டும்: பிரதமர் வோங்

1 mins read
c7b5d42e-2736-41cf-ad7a-7a37738efcb8
பிலிப்பீன்சின் சிபு நகரில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
Google News Preferred Icon

சிபு: கடல்வழிப் பயண உரிமைகளையும் சுதந்திரத்தையும் ஆசியான் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும் என்றும் குறிப்பாக, அனைத்துலக நீர்வழிகளில் அவ்வாறு செய்யவேண்டும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தி உள்ளார்.

ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்று வெள்ளிக்கிழமை (மே 8) உரையாற்றிய அவர், விநியோகத் தொடரின் மீள்திறன் என்பது கடல்துறை இணைப்பைச் சார்ந்தே உள்ளது என்றார்.

“ஹோர்முஸ் நீரிணை போன்ற நீர்வழிகளை எந்தவொரு தரப்பும் ஆயுதமாகப் பயன்படுத்துவதையும் அவற்றில் கட்டுப்பாடுகள் விதிப்பதையும் அனுமதிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். மேலும், அது வட்டார அளவிலும் உலக அளவிலும் முக்கியமான கடல்வழிப் பாதைகளில் சீர்குலைவை ஏற்படுத்திவிடும்,” என்று திரு வோங் மேலும் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு மோதலால் எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்ள ஆசியான் சிறந்த முறையில் தயாராவதற்கு தற்போதும் இனிவரும் ஆண்டுகளிலும் செய்ய வேண்டியவை குறித்து கருத்துரைத்தபோது பிரதமர் வோங் இதனை மீண்டும் வலியுறுத்தினார்.

“1982ஆம் ஆண்டின் ஐநா கடல் சார்ந்த சட்ட மரபு முக்கிய நீரிணைகள் வழியாகத் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்கிறது. ஆசியானில் இடம்பெற்றுள்ள எல்லா உறுப்பு நாடுகளும் அந்த மரபுக்கு உடன்பட்டுள்ளன,” என்றார் திரு வோங்.

குறிப்புச் சொற்கள்
லாரன்ஸ் வோங்ஆசியான்உச்சநிலை மாநாடு