நைஜீரியாவில் ஆயுதத் தாக்குதல்: 50 பேர் பலி

நைஜீரியாவில் ஆயுதத் தாக்குதல்: 50 பேர் பலி

1 mins read
e766830f-9036-49bc-8e01-9fd0c2081dfc
தாக்குதலுக்கு ஆளான கிராமம். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மைதுகுரி (நைஜீரியா): நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான ஸாம்ஃபாராவில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த ஆயுதத் தாக்குதலில் குறைந்தபட்சம் 50 பேர் கொல்லப்பட்டனர்.

ஆயுதம் தாங்கியோர் அந்த மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் புகுந்து ஏராளமான பெண்களையும்ம் குழந்தைகளையும் கடத்திச் சென்றதாக மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

மாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய தாக்குதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணி வரை நீடித்ததாகவும் ஹமிசு ஏ.ஃபாரு என்னும் அந்த சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

கட்டடங்களுக்குத் தீ மூட்டிய கும்பல், தப்பித்து ஓட முயன்ற பொதுமக்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
நைஜீரியாதாக்குதல்கொலை

தொடர்புடைய செய்திகள்