‘லம்ப்டா ஸ்கோர்பிஐ’ மோட்டார்சைக்கிளுக்கு ஒப்புதல்

‘லம்ப்டா ஸ்கோர்பிஐ’ மோட்டார்சைக்கிளுக்கு ஒப்புதல்

1 mins read
7264edef-a1bd-4555-8354-870eef2b69f7
சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட ஸ்கோர்பியோ நிறுவனத்தின் லம்ப்டா ஸ்கோர்பிஐ மின் மோட்டார்சைக்கிள். - படம்: ஸ்கோர்பியோ இலெக்டிரிக்

சிங்கப்பூரின் மின் மோட்டார்சைக்கிள்களைத் தயாரிக்கும் ஸ்கோர்பியோ எலெக்டிரிக் நிறுவனத்தின் லம்ப்டா ஸ்கோர்பிஐ ரக மின் மோட்டார்சைக்கிளுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை வழங்கியுள்ளது.

அதையடுத்து கூடிய விரைவில் சிங்கப்பூரின் சாலைகளில் லம்ப்டா ஸ்கோர்பிஐ மின் மோட்டார்சைக்கிள்களைக் காண முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லம்ப்டா ஸ்கோர்பிஐ மோட்டார்சைக்கிளைப் பெரிய அளவில் உற்பத்திசெய்யவும் ஆணையத்தின் ஒப்புதல் வழிவகுப்பதாக ஸ்கோர்பியோ எலெக்டிரிக் நிறுவனம் குறிப்பிட்டது.

சிங்கப்பூரிலும் உலக அளவிலும் உள்ள மோட்டார்சைக்கிள் பிரியர்களுக்குத் தனித்துவமான அனுபவத்தைத் தரும் இலக்கை நோக்கி இன்னும் ஒரு அடி முன்னெடுத்து வைக்க ஆணையத்தின் ஒப்புதல் உதவுகிறது என்றார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோ‌ஷுவா கோ.

யுரோஸ்போர்ட்ஸ் குளோபல் என்ற நிறுவனத்தால் 2017ஆம் ஆண்டு ஸ்கோர்பியோ அறிமுகம் செய்யப்பட்டது.

அவசர காலகட்டத்தில் உதவிசெய்ய சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையுடன் தேவையான தகவல்களையும் பகிர்ந்துகொள்வதாக ஸ்கோர்பியோ நிறுவனம் தெரிவித்தது.

லம்ப்டா ஸ்கோர்பிஐ எப்போது விநியோகம் செய்யப்படும் என்பதற்கான கூடுதல் விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
மின்சாரம்மோட்டார்சைக்கிள்ஒப்புதல்நிலப் போக்குவரத்து ஆணையம்