உட்லண்ட்சில் விபத்து; மருத்துவமனையில் சைக்கிளோட்டி

உட்லண்ட்சில் விபத்து; மருத்துவமனையில் சைக்கிளோட்டி

1 mins read
b733939b-84e3-4cf6-9abe-d19d44abcd1d
உட்லண்ட்ஸ் அவென்யூ 8, உட்லண்ட்ஸ் அவென்யூ 9 இல் உள்ள சாலைச் சந்திப்பில் விபத்து ஏற்பட்டது. - படம்: எஸ்ஜி ரோட் விஜிலான்டே/ஃபேஸ்புக்
Google News Preferred Icon

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த 21 வயது சைக்கிளோட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உட்லண்ட்ஸ் அவென்யூ 8, உட்லண்ட்ஸ் அவென்யூ 9 இல் உள்ள சாலைச் சந்திப்பில் விபத்து ஏற்பட்டது.

“விபத்து குறித்து தங்களுக்கு மாலை 5 மணிவாக்கில் தகவல் வந்தது, அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்தோம்,” என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்போது சைக்கிளோட்டி சுயநினைவுடன் இருந்தார்.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது. 56 வயது கார் ஓட்டுநர் விபத்து தொடர்பான விசாரணையில் அதிகாரிகளுக்கு உதவி வருகிறார்.

விபத்து குறித்த காணொளி எஸ்ஜி ரோட் விஜிலான்டே (SG Road Vigilante) ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

காணொளியில் காரும் சைக்கிளும் மோதிக்கொள்ளும் காட்சிப் பதிவாகியுள்ளது. காரில் மோதிய சைக்கிளோட்டி சில அடி தூரம் தூக்கி வீசப்படுவதைக் காணொளியில் பார்க்க முடிந்தது.

குறிப்புச் சொற்கள்
உட்லண்ட்ஸ்விபத்துசைக்கிள்