9ஏர்: குவாங்சோவுக்குப் புதிய மலிவுக்கட்டண விமானச் சேவை

9ஏர்: குவாங்சோவுக்குப் புதிய மலிவுக்கட்டண விமானச் சேவை

1 mins read
07132996-060f-4f68-a0ba-11c44619e803
சீனாவின் குவாங்சோ நகரைத் தளமாகக் கொண்ட ‘9ஏர்’ விமான நிறுவனம், ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் யின்சுவான், குவாங்சோ மற்றும் சிங்கப்பூர் இடையே அன்றாட விமானச் சேவைகளை வழங்கும் எனப் புதன்கிழமையன்று (ஜூலை 8) அறிவிக்கப்பட்டது. - படம்: 9ஏர்/ஃபேஸ்புக்
Google News Preferred Icon

சிங்கப்பூரிலிருந்து சீனாவின் குவாங்சோ நகரத்துக்கு நேரடிப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்குப் புதிய மலிவுக்கட்டண விமானச் சேவை அறிமுகமாகவுள்ளது.

சீனாவின் குவாங்சோ நகரைத் தளமாகக் கொண்ட ‘9ஏர்’ விமான நிறுவனம், ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் யின்சுவான், குவாங்சோ மற்றும் சிங்கப்பூர் இடையே அன்றாட விமானச் சேவைகளை வழங்கும் எனப் புதன்கிழமையன்று (ஜூலை 8) அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் பயணிகள் ஒரே விமானத்தில் குவாங்சோவிலிருந்து வடமேற்கு சீனாவின் நிங்சியா ஹுய் பகுதியின் தலைநகரான யின்சுவானுக்கு தங்கள் பயணத்தைத் தொடர முடியும்.

இந்தப் புதிய பயணப் பாதையின் முதல் விமானம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதியன்று சிங்கப்பூர் வந்தடையும். ‘ஜுனேயாவ் ஏர்’ விமானச் சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான துணை நிறுவனம் ‘9ஏர்’. ‘9ஏர்’ விமானச் சேவை நிறுவனம் 27 போயிங் 737 ரக விமானங்களைக் கொண்டு இந்தச் சேவைகளை வழங்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
விமானச் சேவைசிங்கப்பூர்சீனாமலிவுக் கட்டணம்