$40,000 கையாடல்: பணத்தைத் திருப்பி செலுத்தத் தவறிய முன்னாள் ஸ்கூட் ஊழியருக்கு ஏழு மாதச் சிறை

$40,000 கையாடல்: பணத்தைத் திருப்பி செலுத்தத் தவறிய முன்னாள் ஸ்கூட் ஊழியருக்கு ஏழு மாதச் சிறை

1 mins read
6d16a9eb-c5f6-475b-9cdd-7f11a1b32f12
லுக்மான் ஹக்கீம் ஷாஃபாவி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஸ்கூட் விமான நிறுவனத்திடமிருந்து கையாடல் செய்த முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்தத் தவறிய குற்றத்திற்காக அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியருக்கு ஏழு மாத சிறைத்தண்டனை வெள்ளிக்கிழமை (மார்ச் 26) விதிக்கப்பட்டது.

32 வயதான லுக்மான் ஹக்கீம் ஷாஃபாவி, கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையானபோது, தான் கையாடல் செய்த கிட்டத்தட்ட $40,000 ரொக்கத்தைத் திருப்பிச் செலுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

அந்த நேரத்தில் அவரிடம் $10,000 பணம் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

கூடுதல் பணத்தைத் திரட்டுவதற்காக அவருடைய வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

மார்ச் 27ஆம் தேதி நடந்த விசாரணையில், லுக்மான் கூடுதலாக $1,000 மட்டுமே திரட்டியுள்ளதாகத் துணை அரசு வழக்கறிஞர் ஜனேசா புவா தெரிவித்தார்.

அதன் மூலம் ஸ்கூட் நிறுவனத்திற்கு அவர் திருப்பிச் செலுத்துவதற்காக மொத்தமாக $11,000 ரொக்கத்தை மட்டும் கொண்டுவந்ததாகக் கூறப்பட்டது.

மீதமுள்ள பணத்தை ஏற்பாடு செய்வதற்காக லுக்மான் மீண்டும் கூடுதல் அவகாசம் கேட்டார். அவருடைய கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

ஸ்கூட் நிறுவனத்தில் பணியாற்றியபோது, விமானப் பயணத்தில் விற்பனை செய்யப்பட்ட உணவு, பானங்களின் மூலம் கிடைத்த ரொக்கத்தைக் கையாடல் செய்தார்.

அவர்மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அவருக்கு மார்ச் 27ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்