‘ஐராசை’ ஏமாற்ற முயன்ற மாதிற்கு நான்கு மாதச் சிறை

1 mins read
6b598cf4-c66e-4296-92e5-74ee1b02376d
படம்: - பிக்சாபே

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தை (ஐராஸ்) ஏமாற்றி, வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்கீழ் (ஜேஎஸ்எஸ்) $8,500க்கும் மேல் மானியங்களைப் பெற முயற்சி செய்த மலேசிய மாதிற்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை திங்கட்கிழமை விதிக்கப்பட்டது.

வோங் லாய் கூக், 48, என்ற அம்மாது, கடன் வசூல் செய்யும் ஒரு நிறுவனத்தின் மனிதவள மேலாளராகப் பணிபுரிந்தார்.

அம்மாது தன்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

தண்டணை விதிக்கப்படுமுன் அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற ஆறு குற்றச்சாட்டுகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அவர் இந்தக் குற்றத்தை 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இக்குற்றத்தைப் புரிந்தபோது, அவர் தனது அப்போதைய கணவரின் நிறுவனமான ‘டபிள் ஏஸ் அசோசியேட்சில்’ பணிபுரிந்ததாகக் கூறப்பட்டது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காலத்தில் உள்ளூர் தொழிலாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள முதலாளிகளுக்கு ஊதிய ஆதரவு வழங்குவதற்காக வேலை ஆதரவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்