வாம்ப்போ அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்

வாம்ப்போ அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்

1 mins read
96fa7299-4f3c-4a6e-bfdd-e48277eb87df
கைது நடவடிக்கையின்போது ஆடவரிடம் இருந்து 3,329 கிராம் கஞ்சா, 121 கிராம் ஐஸ், 55 கிராம் எக்ஸ்டசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு
Google News Preferred Icon

சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) வாம்ப்போ பகுதி அருகே 3 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் 25 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அதிகாலை நடந்த சோதனையில் ஆடவரின் காரில் இருந்து போதைப் பொருள்கள் பிடிபட்டன. பின்னர் கேலாங் ஈஸ்டில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் சில போதைப்பொருள்கள் சிக்கின.

ஆடவர்மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

கைது நடவடிக்கையின்போது ஆடவரிடம் இருந்து 3,329 கிராம் கஞ்சா, 121 கிராம் ஐஸ், 55 கிராம் எக்ஸ்டசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு 81,000 வெள்ளிக்கு மேல். ஆடவரிடம் இருந்து 1,259.90 வெள்ளி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
போதைப் பொருள்கஞ்சாகைது