தாள் பயன்பாட்டைக் குறைக்க சிங்கப்பூர் பூல்ஸ் செயலி அறிமுகம்

தாள் பயன்பாட்டைக் குறைக்க சிங்கப்பூர் பூல்ஸ் செயலி அறிமுகம்

1 mins read
Google News Preferred Icon

தாள் பயன்பாட்டைக் குறைக்க சிங்கப்பூர் பூல்ஸ் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய செயலி மூலம் 4D, டோட்டோ ஆகியவற்றுக்கான படிவங்களைப் பூர்த்தி செய்யலாம். எண்களைத் தேர்ந்தெடுக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படும் 4D, டோட்டோ தாட்களின் பயன்பாட்டை இது குறைக்கும். அதுமட்டுமல்லாது பொறுப்புணர்வுடன் சூதாட இது வகை செய்யும் என்று சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். 4D, டோட்டோ ஆகியவற்றுக்கான தாட்களை இதுவரை பயன்படுத்தி வரும் பத்தில் ஒருவர் செயலிக்கு மாறினால் ஓராண்டுக்கு ஏறத்தாழ 71 டன் தாட்கள் சேமிக்கப்படும். இது 1,200க்கும் அதிகமான மரங்களுக்குச் சமம்.