வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் தகுதிபெறும் 2.4 மில்லியனுக்கும் மேலான சிங்கப்பூரர்களுக்கு 400லிருந்து 600 வெள்ளி வரை ரொக்கமாக வழங்கப்படும்.
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினத்தைக் கையாள உதவ இத்தொகை வழங்கப்படுவதாக நிதி அமைச்சு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) தெரிவித்தது.
இதற்குத் தகுதிபெற ஒருவர் சிங்கப்பூரில் வாழ்ந்துகொண்டிருக்கும் குடிமகனாக இருக்கவேண்டும். 2026ஆம் ஆண்டில் அவருக்கு 21 வயது அல்லது அதைத் தாண்டியிருக்கவேண்டும்.


