மூன்று மாதங்களுக்குள் 1,929 மின்சிகரெட் குற்றங்கள்

மூன்று மாதங்களுக்குள் 1,929 மின்சிகரெட் குற்றங்கள்

1 mins read
58e0afbe-44ca-4f1d-990b-32203be65fe8
எட்டோமிடேட் போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகக் கூறி பிடிபட்ட 167 பேரில் 108 பேர் மறுவாழ்வுத் திட்டங்களில் அமர்த்தப்பட்டுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் 2ஆம் தேதிவரை, 1,929 பேர் மின்சிகரெட் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களில் 167 பேர் எட்டோமிடேட் போதைப்பொருள் அடங்கிய மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தினர்.

அவ்வாறு போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்திய 108 பேர் மனநலக் கழகத்திலும் சமூக சேவை அமைப்புகளிலும் மறுவாழ்வுத் திட்டங்களில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த விவரங்களை சுகாதார அமைச்சும், சுகாதார அறிவியல் ஆணையமும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

மேலும் 33 பேர் விசாரணை முடிவுகளுக்க்ஆகக் காத்திருக்கின்றனர். அறுவர் மறுவாழ்வுத் திட்டத்தின்படி குறிப்பிட்ட இடங்களுக்கு விரைவில் அனுப்பப்படுவர். எஞ்சிய 20 பேரில் அறுவர் வெளிநாட்டினர் என்பதால் அவர்கள் நாடுகடத்தப்படுவர்.

மற்ற 14 பேரும் வேறு குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனைக்கு ஆளாகியுள்ளனர். மறுவாழ்வுத் திட்டத்தில் அமர்த்தப்பட்ட 105 பேரில் மூவர் முதல் நேர்காணலுக்கு வரவில்லை.

மின்சிகெரெட் குற்றங்களுக்காக இரண்டாம் முறையாகப் பிடிபட்டுள்ள 13 பேர் சுகாதார அறிவியல் ஆணையத்தின் நேரடி மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

தண்டனையாக விதிக்கப்பட்ட நேர்காணல்களுக்கும் மறுவாழ்வுத் திட்டங்களுக்கும் செல்லாமல் தவிர்ப்பவர்கள்மீது சட்டப்படி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

குறிப்புச் சொற்கள்