பின்னால் இருந்து வந்த கார் மோதியதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார்சைக்கிளோட்டி (காணொளி)

பின்னால் இருந்து வந்த கார் மோதியதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார்சைக்கிளோட்டி (காணொளி)

1 mins read
Google News Preferred Icon

தேசிய விளையாட்டரங்கம் அருகே ஸ்டேடியம் டிரைவில், பின்னால் இருந்து வந்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார் ஒன்று மோட்டார்சைக்கிள்மீது மோதியதில், அந்த மோட்டார்சைக்கிளோட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

அதில் காயமடைந்த அந்த 49 வயது மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

நேற்று புதன்கிழமை (அக்டோபர் 6) மாலை நிகழ்ந்த இந்த விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த மோட்டார்சைக்கிளோட்டி உணவு விநியோக ஓட்டுநராக இருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த விபத்து குறித்து இரவு 7.34 மணிக்கு தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக போலிஸ் கூறியது.

அந்த மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தார்.

விபத்து குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
விபத்துமருத்துவமனைகாயம்