சாங்கி கட்டுமானத்தளத்தில் சூறாவளியா ? (காணொளி)

1 mins read
Watch on YouTube

சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையக் கட்டுமானப் பகுதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) சூறாவளி வந்தது போல் அங்கிருந்த பொருள்கள் திடீரென பறக்கத் தொடங்கின.

அந்த சம்பவம் தொடர்பான காணொளியும் சமூக ஊடகத்தில் பரவியது.

அதைத்தொடர்ந்து "டுடே' செய்தித்தளம்' சாங்கி விமான நிலையக் குழுமத்திடம் சில கேள்விகள் கேட்டதாக அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிட்டது.

திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் அந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குழுமத்தின் பேச்சாளர் டுடேயிடம் கூறியதாக அது குறிப்பிட்டது.

காணொளியில் கட்டுமானத்தளத்தில் இருந்த குப்பைகள், உலோக அட்டைகள், தடுப்புகள் போன்றவை காற்றில் பறப்பதைத் தெளிவாக காண முடிந்தது.

குறிப்புச் சொற்கள்