கார் மோதியதில் மோட்டார்சைக்கிளோட்டி தூக்கி வீசப்பட்டார்

கார் மோதியதில் மோட்டார்சைக்கிளோட்டி தூக்கி வீசப்பட்டார்

1 mins read
Google News Preferred Icon

பாசிர் ரிஸ் டிரைவ் 3, இலாயஸ் சாலைச் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 3) மாலை ஏற்பட்ட விபத்து ஒன்றில் காயமடைந்த 25 வயது மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

இந்த விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

அதில், உணவு விநியோக ஓட்டுநரான அந்த மோட்டார்சைக்கிளோட்டி, சாலைச் சந்திப்பில் காத்திருக்கிறார்.

அவ்வழியாக வந்த மெர்சிடி-பென்ஸ் கார் ஒன்று, பின்னால் இருந்து மோட்டார்சைக்கிள்மீது மோதியது. இதன் விளைவாக அவர் சாலையில் தூக்கி விசப்பட்டார்.

அந்த காரின் முன்கண்ணாடியும் முன்பகுதியும் மோசமாகச் சேதமடைந்தன.

சாலைச் சந்திப்பின் நடுவே கிடந்த அந்த மோட்டார்சைக்கிளோட்டிக்கு வழிப்போக்கர்கள் உதவினர்.

"25 வயது ஆண் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தார்," என்று போலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
காயம்