சிங்கப்பூரில் திருக்கார்த்திகை; நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
1 mins read
புலர்ந்த காலைப்பொழுதில் மலர்ந்த முகங்களுடன் பக்தர்கள் திரண்டு பல்வேறு வகையான வேண்டுதல்களிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். - படம்: த.கவி
அருள்மிகு தொண்டாயுதபாணி ஆலயத்தில் பல்வண்ணப் பொலிவுடன் முருகப் பெருமான் திருவுருவம். - படம்: த.கவி
தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்திற்கு முன்பு திருக்கார்த்திகை நன்னாளன்று அலகுக் காவடி அசைந்து ஆடுகிறது. - படம்: த.கவி
மயிலிறகுகள், மலர்ச்சரங்கள் ஆகியவை இந்தக் காவடிக்கு மனங்கவரும் அழகைச் சேர்க்கின்றன. - படம்: த.கவி
ஆலயச் சன்னதிக்குமுன் ஆனந்த இசைமுழக்கம். - படம்: த.கவி
பால்குடத்தை ஏந்திக்கொண்டு, உடல் முழுவதும் அபிஷேகப் பொருள்கள் நிறைந்த சிறு குடங்களைக் குத்தி இணைத்தவாறு பக்தர் ஒருவர் வேண்டுதல் செலுத்துகிறார். - படம்: த.கவி
வெயிலில் பால்குடம் எடுத்துச் செல்லும் பெண் பக்தர். - படம்: த.கவி
அலகுக் காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர். - படம்: த.கவி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

