எழுமின் இளையோரே!

எழுமின் இளையோரே!

1 mins read
e6ca987b-544f-42c4-9257-1e63ee562ecc
-
Google News Preferred Icon

டி.என்.இமாஜான்

எழுமின் இளையோரே!

விண்ணைத் தொடவே சிறகை விரிப்பீர்!

விவேகம் கொண்டே வெல்லத் துணிவீர்!

கண்ணின் கனவை நனவாய் மாற்றிப்

பண்ணிடும் கடமையில் உறுதி கொள்வீர்!

தோல்வி கண்டு தொய்ந்து போகாமல்

தோள்கள் உயர்த்தித் துணிந்து நிற்பீர்!

வேர்வை சிந்தி உழைப்பைத் தந்தால்

வெற்றிச் சிகரம் உமக்குக் பணியும்!

கவலை இருளைக் கடந்து செல்வீர்!

புதிய கதிராய் உலகே ஒளிர்வீர்!

நாளைய உலகம் உமது கையில்

நாமே தலைவரென்று நடந்து வாரீர்!

சாதி மதத்தின் சங்கிலி உடைப்பீர்!

சமத்துவக் காற்றை எங்கும் விதைப்பீர்!

குறிப்புச் சொற்கள்