பட்டைதீட்டியவன்.....

பட்டைதீட்டியவன்.....

1 mins read
62ff80aa-fe2d-479d-b289-68f9a512a7a3
-
Google News Preferred Icon

மல்லிகையை விஞ்சும்

மண்வாசம் சொன்னவன்

அரசியலைவிடவும்

அரிசியைப் பேசியவன்

குச்சுவீட்டுக்குள்

கோபுரம் கட்டியவன்

வாத்து கிழித்த நீரின்

கூரைநுனி மழையில்

காதலைச் சொன்னவன்

மண்ணில் மழையில்

பூச்சியில் சிட்டில்

தாய்மை சொன்னவன்

ஆலமர ஊஞ்சலென

குடும்பம் சொன்னவன்

புயல் கிழித்த கூட்டில்

வன்மம் சொன்னவன்

கழுகின் கண்களில்

குரூரம் சொன்னவன்

நந்தவனக் குருவிகளில்

நட்பைச் சொன்னவன்

பதுங்கும் புலியில்

பகைமை சொன்னவன்

மனம்கவர் அழகை

மயிலிறகில் சொன்னவன்

புதுமைப்பெண்ணின்

பாரதியைக் கண்டவன்

வெள்ளித்திரை வைரங்களைப்

பட்டை தீட்டியவன்

பறந்துபோனானே

அம்மவோ!

பறந்துபோனானே

அமீதாம்மாள்

குறிப்புச் சொற்கள்
கவிதைகதைஅமிதாம்மாள்

தொடர்புடைய செய்திகள்