நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்

2 mins read
2506690d-57d9-4760-aa1b-3796effe4d41
த.நவீன் எழுதிய சியர்ஸ் நூல். - படம்: தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்
Google News Preferred Icon

தலைப்பு: சியர்ஸ்

நூலாசிரியர்: த. நவீன்

பதிப்பாளர்: சென்னை : வேரல் புக்ஸ், 2024.

குறியீட்டு எண்: NAV

அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

அமெரிக்கன் கல்லூரியில் பயின்றபோது, தனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை நிரந்தரமாகப் பதிவு செய்யும் நோக்கில் எழுதப்பட்டதுதான் இந்த நூல்.

2007-ஆம் ஆண்டில் பொறியியல் படிப்பு என்பது பலரது கனவு. அதற்காக கடுமையாகப் படித்து, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்று, மதுரையில் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் துவங்குகிறார் நவீன். இரண்டாண்டுகள் முடிந்ததும் அவரது மனம் பொறியியல் படிப்பில் லயிக்கவில்லை. அதைப் பாதியில் விட்டுவிட்டு பெற்றோர்களிடம் போராடி, பல்கலைக் கல்லூரிகளில் விண்ணப்பித்து, இறுதியில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்துறையில் சேர்ந்து படிக்கிறார். அந்தக் கல்லூரி வாழ்க்கை அவரை எப்படி மாற்றியது, என்ன கற்றுக்கொண்டார் என்பதை நாவலின் 15 அத்தியாயங்கள் சொல்லும்.

நாவலின் பல இடங்களில் தனது ஆசிரியர்களைப் பற்றியும் பாடம் கற்றுத்தரும் விதம் பற்றியும் கூறும்போது கலைக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அவர்களின் வாழ்வில் எத்தனை விதமான அனுபவங்களை, இயற்கையோடு இயைந்து கற்றுக்கொள்கிறார்கள் என்பதை வாசகர்களால் உணரமுடிகிறது.

பல சிறந்த நூல்களைப் பற்றியும் உலகத் தரமான குறும்படங்களைப் பற்றியும் நாவலில் எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார். கற்றல் என்பது கல்லூரிப் புத்தகங்களோடு முடிவதில்லை என்ற கருத்தைப் பதிவுசெய்கிறார். ஒரு கப் சூடான காபியுடன் இந்த நூலை வாசிக்கும் பொழுது வாசகர்கள் தங்களின் கல்லூரி நாட்களை நினைவுகூர்வர் என்பதில் ஐயமில்லை!

தேசிய நூலக வாரியத்துக்காக, ராம்கோபால் சபரிஸ்ரீ

இந்த நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்