பகல் தூக்கத்தைத் துரத்தியடிக்கும் வழிகள்

பகல் தூக்கத்தைத் துரத்தியடிக்கும் வழிகள்

2 mins read
1aca864c-f0a5-48a5-8417-8603533933ee
நீரிழப்பு காரணமாக ஒருவருக்கு மிகுந்த சோர்வு ஏற்படலாம். தொடர்ந்து நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பது தூக்கத்தைப் போக்க உதவும்.  - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

பகலில் தூக்கம் வருவது பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் ஒரு நிலை. பகல்நேரத் தூக்கத்தைக் குறைக்க வீட்டில் அல்லது அலுவலகத்தில் சில வழிகளை நாம் கையாளலாம். 

காஃபின் உட்கொள்ளுதல் 

உடல்ரீதியாக சுறுசுறுப்பைத் தூண்டுவதற்கு காஃபின் பயன்படுத்தப்படுகிறது. பகலில் விழித்திருக்க காபி, தேநீர் போன்ற காஃபின் உள்ள பானங்கள் உதவும். 

சுறுசுறுப்பைத் தூண்டும் உணவு 

தயிர், பெர்ரி பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைக் கொண்ட குறைந்த சர்க்கரை, அதிக நார்ச் சத்துடைய உணவு வகைகளைச் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்ற சுறுசுறுப்பு ஏற்படும். 

பகலில் சிறிது நேரம் உறங்குவது 

வீட்டிலிருந்தபடியே வேலை செய்பவர்கள் பகலில் சிறிது நேரம் உறங்கக்கூடும். இருப்பினும் பகல் நேரத் தூக்கத்தை நீளவிடாமல் இருப்பது சிறந்தது. 

அலுவலகத்தில் வேலை செய்வோர் தூக்கம் கொள்ளலாம். தற்போது சில அலுவலகங்களில் ஓய்வெடுக்க அறைகள் இருப்பதால் சுமார் 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் சிறுதூக்கம் உடலுக்கு உற்சாகத்தை அளிக்கும். 

சூரிய வெளிச்சம் 

வேலை நேரத்தில் தூக்கம் வந்தால் சிறிது நேரம் அலுவலகம் அல்லது வீட்டின் வெளியே சூரிய ஒளி படும் வகையில் நிற்கலாம். போதுமான அளவு சூரிய வெளிச்சம், சிறந்த இரவு நேரத் தூக்கத்தைத் தூண்டிவிடும்.   

அதிகளவு தண்ணீரை அருந்துதல்

நீரிழப்பு காரணமாக ஒருவருக்கு மிகுந்த சோர்வு ஏற்படலாம். தொடர்ந்து நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பது தூக்கத்தைப் போக்க உதவும். 

மின்னிலக்கக் கருவிகளைத் தவிர்த்தல்

நீண்ட நேரம் கணினி, திறன்பேசி போன்ற மின்னிலக்கச் சாதனங்களைத் தொடர்ந்து பார்ப்பதால் கண்களுக்கு நல்லதல்ல. இதனால் மிகுந்த சோர்வு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். அவ்வப்போது கண்களுக்குச் சில நிமிட நேரம் ஓய்வளிப்பதால் உடலும் சுறுசுறுப்பாக இருக்கும். 

பகல்வேளையில் ஏற்படும் தூக்கமும் சோர்வும் அன்றாட வாழ்க்கைக்குத் தடையாக இருந்தால் இது மிகவும் தீவிரமான ஒரு பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் ஒரு மருத்துவரை நாடுவது சிறப்பு எனப் பரிந்துரைக்கப்படுகிறது. 

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்