வெற்றிச்செல்வனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

வெற்றிச்செல்வனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

1 mins read
4ffa9f33-0328-4ae9-90c8-6bd529d5d205
‘செவகாளி’ சிறுகதைத் தொகுப்பு. - படம்: வெற்றிச்செல்வன்
multi-img1 of 2
Google News Preferred Icon

எழுத்தாளரும் கவிஞருமான வெற்றிச்செல்வன் இராசேந்திரனின் ‘செவகாளி’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) இடம்பெறவுள்ளது.

விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள தேசிய நூலக வாரியத்தின் ‘தி பாட்’ அரங்கில் காலை 10 மணிக்கு நிகழ்ச்சி இடம்பெறவிருக்கிறது.

எழுத்தாளர் அழகுநிலாவும் திரு வினோத்தும் நூல் குறித்துச் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில், ‘தேக்காவில் பொம்மை வாங்குபவன்’ எனும் கவிதைக்காக முதல் பரிசு பெற்றவர் வெற்றிச்செல்வன்.

அவர் இதற்குமுன் ‘கீதாரியின் உப்புக்கண்டம்’ எனும் கவிதை நூலையும் ‘குளம்படி’ எனும் புதினத்தையும் வெளியிட்டுள்ளார்.

‘செவகாளி’ சிறுகதைத் தொகுப்பைச் சிங்கப்பூரின் அலர் பதிப்பகம் வெளியிடுகிறது.

குறிப்புச் சொற்கள்