தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் மூன்று அங்க நிகழ்ச்சி

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் மூன்று அங்க நிகழ்ச்சி

2 mins read
6dcb53e1-18c1-4c5f-abde-2e2e2ed71f2d
மாணவர்களுக்கான பயிலரங்கு, அதனைத் தொடர்ந்த போட்டி, அதில் வென்ற மாணவர்களுக்கு பட்டிமன்றத்தில் பேச வாய்ப்பு ஆகிய மூன்று அங்கங்களாக போட்டிகள் நடைபெறவுள்ளன. - படம்: பிக்சா பே
Google News Preferred Icon

தமிழ்மொழி விழாவையொட்டி தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், மாணவர்களுக்கான பயிலரங்கம், போட்டி, பட்டிமன்றம் ஆகிய மூன்று அங்க நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

முதல் அங்கமான பயிலரங்கம் மார்ச் 14 காலை 9 மணிமுதல் 11 மணிவரை தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் நடைபெறும்.

பயிலரங்கில் பங்குபெற்ற மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மார்ச் 28 காலை 9 மணிமுதல் 11 மணிவரை தேசிய நூலகத்தின் ‘தி பாட்’ அரங்கில் இடம்பெறும். பயிலரங்கில் பங்குபெற்ற மாணவர்கள்தான் இந்தப் போட்டியில் பங்குபெற முடியும். பேச்சுப்போட்டிக்கான தலைப்பு பயிலரங்கில் தரப்படும்.

பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களில் நான்கு பேருக்கு ஏப்ரல் 18ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் நூலக அரங்கில் நடைபெறும் பட்டிமன்றத்தில் பேச வாய்ப்பு வழங்கப்படும்.

உயர்நிலை 1, 2 முதல் பிரிவு, உயர்நிலை 3, 4 இரண்டாம் பிரிவு, பல்துறை, தொடக்கக்கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்கள் மூன்றாம் பிரிவிலும் கலந்துகொள்ளலாம்.

மாணவர்களுக்கான சுற்றறிக்கை பள்ளிகளுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. அதிலுள்ள ‘கியூஆர்’ குறியீட்டை வருடி பதிவுசெய்துகொள்ளலாம்.

மேல்விவரங்களுக்கு: திரு ரஜித் 90016400 / திருவாட்டி நபிலா 90268601

மேலும் மூன்று நிகழ்ச்சிகள்

யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘விழிகளிலே வெள்ளோட்டம்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மார்ச் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு தேசிய நூலகத்தில் நடைபெறவுள்ளது.

‘அன்னையர் திலகம்’ விருது வழங்கும் விழா மே 10ஆம் தேதி மாலை தேசிய நூலகத்தில் நடைபெறும்.

மொழிபெயர்ப்புப் போட்டி மே 24ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

குறிப்புச் சொற்கள்