கவிமாலையின் ‘கவியரசர்-97’ சிறப்பு நிகழ்வு

கவிமாலையின் ‘கவியரசர்-97’ சிறப்பு நிகழ்வு

1 mins read
bac48793-79e3-47e6-82bb-b4a0e71a2b97
ஜூன் மாதக் கவிமாலைச் சந்திப்பு ‘கவியரசர்-97’ சிறப்பு நிகழ்வு ஜூன் 29ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் உள்ள ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெறுகிறது. - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

ஜூன் மாதக் கவிமாலைச் சந்திப்பு ‘கவியரசர்-97’ சிறப்பு நிகழ்வு ஜூன் 29ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் உள்ள ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெறுகிறது.

கவியரசர்-97 சிறப்பு நிகழ்வாக இம்மாத கவிமாலை நடைபெறுகிறது. கவியரசரின் புதல்வர் திரு வெங்கட் கண்ணதாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக நிகழ்வில் கலந்துகொள்வார்.  மேலும் ‘கவியரசருக்கு கவி மாலைகள்’ என்ற சிறப்பு கவியரங்கமும் நடைபெற இருக்கிறது.

‘மரபுகளின் மைந்தன்’ எனும் தலைப்பில் கவிஞர் பாலமுருகன், ‘புதுமைகளின் புல்லாங்குழல்’ எனும் தலைப்பில் கவிஞர் அம்பிகா, ‘தத்துவங்களின் தலைவன்’ எனும் தலைப்பில் கவிஞர் தீபக், ‘கடவுள்களின் காதலன்’ எனும் தலைப்பில் கவிஞர் பிரபா தேவி, ‘இயற்கையின் இளவல்’ எனும் தலைப்பில் கவிஞர் சரண்யா முசிலா, ‘ரதிகளின் ரசிகன்’ எனும் தலைப்பில் கவிஞர் சரவணகுமார், ‘தனிமையின் தாய்மடி’ எனும் தலைப்பில் கவிஞர் சியாம் குமார் ஆகியோர் கவியரங்கத்தில் கவிதை படைக்கவிருக்கிறார்கள். நிகழ்வை கவிஞர் இராம.நாச்சியப்பன் வழிநடத்த, இம்மாதப் போட்டிக்கு வந்த கவிதைகள் குறித்த விமர்சனம், கவிதைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசளிப்பு, படித்ததில் பிடித்த அங்கம் ஆகியவை உண்டு. கவிமாலை, அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.

குறிப்புச் சொற்கள்