பற்கூச்சத்திலிருந்து விடுபட ஆயுர்வேதக் குறிப்புகள்

பற்கூச்சத்திலிருந்து விடுபட ஆயுர்வேதக் குறிப்புகள்

1 mins read
5838e9e2-ab46-434a-97c7-8e16d331f8fc
மாதிரிப்படம்: - ஊடகம்
Google News Preferred Icon

சிறுகுழந்தைகள், இளவயதினர், மூத்தோர் எனப் பலரும் பல்வலி, பற்களில் கூச்சம், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்கினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மோசமான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுத் தேர்வு, உணவு உண்ட பின்னர் பற்கள் மீது அக்கறை கொள்ளாதது உள்ளிட்ட பல காரணங்களால்தான் இதுபோன்ற பற்கள் பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன.

இதுபோன்ற நேரத்தில் பற்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எக்கிறார் பீகார் மாநிலத்தின் ஆயுர்வேத மருத்துவர் ரித்தேஷ் மிஸ்ரா.

ஒரு சிலர் குளிர் நீர் குடிக்கும்போது அல்லது ஐஸ்கிரீம் சாப்பிடும்போது தங்கள் பற்களில் கூச்ச உணர்வு அல்லது கடும் வலியை உணர்வார்கள். அத்துடன், வாயில் துர்நாற்றம் வீசுவது, பற்களின் ஈறுகளில் இருந்து ரத்தம் அல்லது சீழ் வெளியேறுவது உள்ளிட்ட சிக்கல்–களையும் எதிர்கொள்வார்கள். இதற்கு எளிய வீட்டு வைத்தியம் பயனளிக்கும் என்கிறார் ரித்தேஷ் மிஸ்ரா.

காலை, இரவு என இரு வேளையும் பல் துலக்கிய பின் 2 சிட்டிகை உப்பு, ஒரு சில சொட்டுகள் கடுகு எண்ணெய், மஞ்சள் தூள் கலந்த கலவையை எடுத்து கையின் நடுவிரலால் பற்கள், ஈறுகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

இதனால் பல் கூச்சம், பல் வலி, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இதனைத் தொடர்ந்து பின்பற்றி வருவதன் மூலம் பற்களும் ஈறுகளும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார் மருத்துவர் ரித்தேஷ் மிஸ்ரா.

குறிப்புச் சொற்கள்
மருத்துவம்