ஆகஸ்ட் மாத கவிமாலைச் சந்திப்பில்‘கவிஞர் வெய்யில்’

ஆகஸ்ட் மாத கவிமாலைச் சந்திப்பில்‘கவிஞர் வெய்யில்’

1 mins read
0ef2642a-63d4-4c54-8009-4236aef57b19
கவிதை ஆர்வலர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். - படம்: கவிமாலை சிங்கப்பூர்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாதாந்திரச் சந்திப்பினை நடத்தி வருகிறது. கவிமாலையின் 279ஆவது மாதச் சந்திப்பு நிகழ்ச்சி 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தேசிய நூலகம், தளம் 1 விபிஆர் அறையில் நடைபெறவிருக்கிறது.   இம்மாதக் கவிமாலையின் சிறப்பாக தமிழகத்திலிருந்து வருகை புரியும் கவிஞர் வெய்யில், ‘போக்கும் புரிதலும்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவிருக்கிறார். மேலும் அவருடைய ‘ஆக்டோபஸின் காதல்’ கவிதை நூல் வெளியீடு காணவிருக்கிறது. இந்நூலிலுள்ள கவிதைகள் வாசிப்பு அங்கமும் நடைபெறவுள்ளது.  நிகழ்ச்சியை கவிஞர் சங்கீதா வழிநடத்துவார். பிடித்த, படித்த கவிதைகளை வாசித்தல், ‘பனி மறந்த வெயில்’ எனும் தலைப்பிலான இம்மாதப் போட்டிக் கவிதைகள் வாசித்தல், விமர்சனம் மற்றும் பரிசளிப்பு நடைபெறும். கவிதை ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.