காஞ்சிபுரத்தில் முத்தமிழ் மையம் சார்பில் கடந்த சனிக்கிழமை (மே 27) நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டில் மில்லத் அகமது எழுதிய 'சிங்கப்பூரில் சரவணன்' என்ற நூலுக்கு நறுவீ விருது வழங்கப்பட்டது.
நறுவீ என்றால் நறுமணமுள்ள மலர்ந்த மலராகும். விழாவுக்கு தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதியரசர் சா. பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி மகாலட்சுமி யுவராஜ் வாழ்த்துரை வழங்கினார். இயக்குநர் கே.பாக்யராஜ், சிறப்புரையுடன் நறுவீ மற்றும் நளதம் விருதுகளை வழங்கி பாராட்டினார்.

