கிண்ணம் கிடைக்கவில்லை; கைவிலங்குதான் கிடைத்தது

கிண்ணம் கிடைக்கவில்லை; கைவிலங்குதான் கிடைத்தது

1 mins read
03265eda-ab40-4249-a1ee-09893c6b3238
பாலியல் குற்றம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக. படம்: இபிஏ -
Google News Preferred Icon

சிட்னி: பாலியல் புகாரின் பேரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை ஆஸ்திரேலியக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

சிட்னியின் ரோஸ் பே பகுதியில் இவ்வார முற்பகுதியில் 29 வயதுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பழகுதளம் மூலமாக அந்த ஆடவரும் அப்பெண்ணும் கடந்த பல நாள்களாகத் தொடர்பில் இருந்தனர். இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி புதன்கிழமை மாலையில் குணதிலக அப்பெண்ணை பாலியல் ரீதியாகச் சீரழித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து இலங்கை தோற்று வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.