செயற்கை நுண்ணறிவு நிரல்கள் குறித்துப் போப்பாண்டவர் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு நிரல்கள் குறித்துப் போப்பாண்டவர் எச்சரிக்கை

1 mins read
4d73e431-9a88-4ab0-abda-5c53d772891f
கூட்டத்தினர் முன்னிலையில் போப்பாண்டவர் உரை.  - படம்: இபிஏ
Google News Preferred Icon

படைப்பாற்றல்மிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்கும்படி போப்பாண்டவர் பதினான்காம் லியோ வலியுறுத்தியுள்ளார்.

சமூகத் தொடர்புகளுக்கான உலக தினத்தில் இதனைத் தெரிவித்த கத்தோலிக்க சமயத் தலைவர், செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகள் அவற்றை உருவாக்குபவர்களின் விருப்புவெறுப்புகளைப் பிரதிபலிப்பதாகக் கூறினார்.

“மனிதர்களின் அடையாளத்தையும் உண்மையான உறவுகளையும் காப்பாற்றுவது சவாலாக உள்ளது,” என்று போப்பாண்டவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவுப் படங்கள் நாளடைவில் மிகவும் துல்லியமான, உண்மைபோன்ற தோற்றத்தைக் கொண்டுள்ள நிலையில், போப் லியோவின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்ற முதல் அமெரிக்கரான போப் பிரான்சிஸ், ஏஐ (AI) தொழில்நுட்ப வளர்ச்சி குறித்துத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். குறிப்பாக, ராணுவப் பயன்பாட்டில் அத்தகைய தொழில்நுட்பம் மனித உயிர்களைக் குறைத்து மதிப்பிடலாம் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்