முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டிகள்

முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டிகள்

2 mins read
b9333707-96ae-40cf-9021-d75de7d60c77
அனைத்துப் போட்டிகளுக்கும் படைப்புகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய இறுதி நாள் 16.03.2026. - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

வரும் ஏப்ரல் மாதம் தமிழ்மொழி விழாவின் ஒரு பகுதியாக சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழா நடைபெறவுள்ளது.

அதனையொட்டி, இவ்வாண்டும் பொதுமக்களுக்கு இலக்கியப் போட்டிகள் நடைபெறும். அதன் அங்கமாகச் சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது.

அனைத்துப் போட்டிகளுக்கும் படைப்புகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய இறுதி நாள் 16.03.2026.

பொதுமக்களுக்கான சிறுகதைப் போட்டி

முதல் பரிசு - $500; இரண்டாம் பரிசு - $300; மூன்றாம் பரிசு - $200. மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $100.

கதைக்கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில், நடப்பதாக மட்டுமே அமைந்திருக்க வேண்டும். பொதுமக்கள் எழுதும் கதைகள் 1,200 முதல் 1,500 சொற்களுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் மூன்று கதைகள்வரை அனுப்பலாம். கதைகளை https://forms.gle/u1Y4UkaGxGzedMPPA என்ற இணைப்பின்வழி பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சிறப்புச் சிறுகதைப் போட்டி

சிறப்பு அறிவியல் சிறுகதைக்கு டாக்டர் காமேஸ்வரன் & டாக்டர் லலிதா காமேஸ்வரன் நினைவுப் பரிசு $250.

சிறப்பு வரலாற்றுச் சிறுகதைக்கு டாக்டர் சங்கரன் & முனைவர் சித்ரா சங்கரன் வழங்கும் பரிசு $250.

போட்டியில் பங்கேற்போர் அறிவியல் கருவைக் கொண்ட கதைளையும் வரலாற்றுக் கருவைக் கொண்ட கதைகளையும் அனுப்பலாம். கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில், நடப்பதாக மட்டுமே அமைந்திருக்க வேண்டும். கதை 1,200 முதல் 1,500 சொற்களுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் ஒவ்வொரு கருவுக்கும் இரண்டு கதைகள்வரை அனுப்பலாம் அல்லது ஏதாவது ஒரு கருவில் ஒரு கதையை மட்டும் அனுப்பலாம்.

கதைகளை https://forms.gle/ezpMVW6v2e4LxRaF7 என்றஇணைப்பின்வழி அனுப்பி வைக்க வேண்டும்.

பல்கலைக்கழக, தேசிய கல்விக்கழக மாணவர்களுக்கும் இளையர்களுக்கும்

பல்கலைக்கழக, தேசியகல்விக்கழக மாணவர்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆனால், மாணவர்கள் அல்லாத இளையர்கள் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்தப் போட்டி சிங்கையின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான எழுத்துச் செம்மல் அமரர் சே.வெ. சண்முகம் – அவரது துணைவியார் ருக்மணி அம்மாள் ஆகியோர் நினைவாக நடத்தப்படுகிறது. பரிசுகளை அவர்களின் குடும்பத்தினர் வழங்குகிறார்கள்.

முதல் பரிசு $300; இரண்டாம் பரிசு $250; மூன்றாம் பரிசு $200. மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $125.

கதைகள் 800 முதல் 1,000 சொற்களுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் 3 கதைகள் வரை பதிவேற்றம் செய்யலாம். கதைகளை அனுப்புவதற்கான இணைப்பு - https://forms.gle/3J8CZwSz4rofZ8GH7

மாணவர்களுக்கான போட்டிகள்

பாலர் பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி வரையிலான போட்டிகளுக்கு எல்லாப் பள்ளிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் தமிழாசிரியரைத் தொடர்புகொண்டு விவரம் அறியலாம்.

சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்கலாம். மேல் விவரங்களுக்கு www.singaporetamilwriters.com எனும் இணையத்தளத்தை நாடலாம். அல்லது செயலாளர் பிரேமா மகாலிங்கத்தை (9169 6996) அல்லது துணைத் தலைவர் அன்புச்செல்வனை (9850 7271) தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்