வாழ்வியல் இலக்கியப் பொழில் மாதாந்தர நிகழ்ச்சி

வாழ்வியல் இலக்கியப் பொழில் மாதாந்தர நிகழ்ச்சி

1 mins read
d62894ed-2a8b-4eb4-bb6b-d2b2f2ec0a30
சனிக்கிழமை நடைபெறவுள்ள மாதாந்தர நிகழ்ச்சியின் விளம்பரப் பதாகை. - படம்: வாழ்வியல் இலக்கியப் பொழில்
Google News Preferred Icon

வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்தர நிகழ்ச்சி இம்மாதம் (மார்ச்) 14ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

அமைப்பின் 101வது சந்திப்பான அந்நிகழ்ச்சி, ஹவ்காங் அவென்யூ 6, எண் 3, பொங்கோல் சமூக மன்ற அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறும். வழக்கமான இலக்கியச் சிற்றுரைகள், தாய்-சேய் இணைந்து படைக்கும் “வேரும் விழுதும்” உள்ளிட்ட அங்கங்கள் இடம்பெறும்.

இந்த மாதம் திருவாட்டி கற்பகலட்சுமி படைக்கும் ‘மாதவப் பெண்கள்’, திரு அழகுராஜ் வழங்கும் ‘கல்வி’ பற்றிய சிற்றுரை, ஜெர்மனியிலிருந்து தமிழ் வான் அவை அமைப்பின் நிறுவனர் திருவாட்டி சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) படைக்கும் ‘இலக்கியத்தில் பெண்கள்’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆகியவை இடம்பெறும்.

‘மாலை’ எனும் தலைப்பில் திரு எல்ல கிருஷ்ணமூர்த்தியின் அறிமுகவுரையும் இடம்பெறவுள்ளது.

மேல் விவரங்களுக்குத் திரு எல்ல கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்புகொள்ளலாம் (9228 8544).

குறிப்புச் சொற்கள்