அறிவார்ந்த அணிகலனைத் தயாரிக்க முனையும் மெட்டா

அறிவார்ந்த அணிகலனைத் தயாரிக்க முனையும் மெட்டா

1 mins read
f9f826bd-af1a-400f-bf5b-915552530130
ஏஐ திறன் கண்ணாடிகளைத் தயாரிக்க ‘ரே-பேன்’ (Ray-Ban), ‘ஓக்லி ‘(Oakley) ஆகியவற்றுடன் மெட்டா செயல்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய கழுத்தணி ஒன்றை மெட்டா நிறுவனம் அடுத்த ஆண்டு (2027) சோதிக்கத் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய தளங்களை இயக்கும் மெட்டா, பல்வேறு வகையான ‘ஏஐ’ திறன் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

வேலையிடங்களுக்குப் பொருத்தமான ‘வேரபிள்ஸ் ஃபார் வொர்க்’ எனப்படும் புதிய வணிகச் சேவையையும் அறிமுகப்படுத்த நிறுவனம் விரும்புகிறது.

‘ஏஐ’ திறன் கண்ணாடிகளைத் தயாரிக்க மெட்டா நிறுவனம் ‘ரே-பேன்’ (Ray-Ban), ‘ஓக்லி ‘(Oakley) ஆகிய நிறுவனங்களுடன் ஏற்கெனவே இணைந்து செயல்பட்டு வருகிறது.

தனது வன்பொருள் பிரிவின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் இந்தப் புதிய தயாரிப்புகளை மெட்டா ஊக்குவித்து வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மெட்டாவின் வன்பொருள் பிரிவு, 4 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்தது.

2026ன் பிற்பகுதிக்குள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியும் அவற்றை மேலும் பல நாடுகளில் விற்பனை செய்தும் கிட்டத்தட்ட 10 மில்லியன் அணியக்கூடிய சாதனங்களை விற்க மெட்டா இலக்குக் கொண்டுள்ளது.

இந்தச் செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்காக, ‘லிமிட்லெஸ்’ என்ற நிறுவனத்தை மெட்டா 2025ல் வாங்கியது. அன்றாட உரையாடல்களைப் பதிவுசெய்து எழுத்து வடிவில் தரக்கூடிய கழுத்தில் அணியும் பதக்கத்தை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
மெட்டாசெயற்கை நுண்ணறிவுஏஐஅணிகலன்