ஆண்டிறுதி விடுமுறைக் காலத்தில் சிங்கப்பூரின் பல ஈர்ப்பிடங்களில் ஏராளமான கருப்பொருள் சார்ந்த அனுபவங்களை எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில், கடைத்தொகுதிகளும் பொழுதுபோக்கு நிறுவனங்களும் பண்டிகைக்கால செயல்பாடுகளைத் தயாரித்துக்கொண்டிருக்கின்றன.
கலை, கலாசாரம்
உலகத் தரம்வாய்ந்த கலையைப் பற்றிச் சிந்தித்தல் அல்லது சிங்கப்பூரின் வளமான கட்டடக்கலை பாரம்பரியத்தைப் பாராட்டுவது ஆகியவையே ஓய்வுநேரத்திற்கான யோசனை என்றால் நகரத்தின் கலைக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், பிரம்மாண்டமான கண்காட்சிகள், பல நூற்றாண்டுகள் பழமையான கலாசாரப் புதையல்களை ரசிக்கப் புதிய வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் எஞ்சியிருக்கும் கடைசிப் பாரம்பரிய சீன முற்றத்து மாளிகையான ‘ஹவுஸ் ஆஃப் டான் யோக் நீ’ ஓராண்டுக்கால மறுசீரமைப்புக்குப் பிறகு சென்ற மாதம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
19ஆம் நூற்றாண்டு முதல் 21ஆம் நூற்றாண்டு வரை சிங்கப்பூர் கலை, அறிவியல் அருங்காட்சியகத்தில் நடைபெறும் ‘வேறோர் உலகம் சாத்தியம்’ என்ற கண்காட்சி காலநிலை, தொழில்நுட்பம், கற்பனை, சமூகம் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட மாற்று எதிர்காலச் சூழ்நிலைகளுக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது.
பூங்காக்களும் பொழுதுபோக்குகளும்
சிங்கப்பூரின் ஏராளமான பசுமைப் பகுதிகள் ஓய்வெடுக்கவோ மனச்சோர்வைப் போக்கவோ சிறந்த இடங்கள் மட்டுமல்ல. அவை எல்லா வயதினருக்கும் ஏராளமான அனுபவங்களை வழங்குகின்றன.
சிங்கப்பூர் பூமலையில் 2026 ஜனவரி 4ஆம் தேதி வரை பாரம்பரிய மரங்களும் செழிப்பான தோட்டப் பாதைகளும் அழகாக ஒளிரும் அலங்காரங்களுடன் ஒளிரவுள்ளன.
2026 ஜனவரி 4ஆம் தேதி வரை கரையோரப் பூந்தோட்டங்களில் கிறிஸ்துமஸ் ரயில் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்புடைய செய்திகள்
சிஸ்டர்ஸ் தீவுகள் கடல்சார் பூங்கா, கூட்ட நெரிசலிலிருந்து வெகுதொலைவில் ஓர் அமைதியான சுற்றுச்சூழல் அனுபவத்தை வழங்குகிறது.
சிங்கப்பூரின் முதல் பிரத்தியேகக் கடல் பூங்காவை இருப்பிடமாகக் கொண்டுள்ள இந்தத் தீவு கடலோரக் காடுகள், பவளப் பாறைகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஒரு புகலிடமாக உள்ளது.
குடும்பக் கொண்டாட்டம்
மாய உலகங்கள், வனவிலங்குச் சந்திப்புகள் முதல், நீருக்கடியில் உள்ள அற்புத உலகங்கள் வரை குடும்பப் பயணங்கள் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான கூக்குரல்களையும் பெரியவர்களுக்கு சிரிப்பொலிகளையும் ஏற்படுத்தும்.
பண்டிகைக் கிராமத்தின் ஒரு பகுதியாக டிஸ்னி காட்சிகளுடன் சாங்கி விமான நிலையம் மின்னுகிறது.
இதில் உண்மையான அளவுள்ள அல்லது அதைவிடப் பெரிய அலங்காரங்கள், பிரியத்துக்குரிய டிஸ்னி கதாபாத்திரங்கள் இடம்பெறும் நிழற்பட இடங்கள், குழந்தைகள் தங்கள் ஆற்றலைச் செலவிடக்கூடிய பகுதிகளை எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூர் ஓஷனேரியம் இந்த ஆண்டு ஜூலையில் திறக்கப்பட்டதிலிருந்து அதை இன்னும் பார்க்கவில்லை என்றால் இப்போது தான் நேரம்.
இந்தக் கடல்வாழ் காட்சியகத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான ‘ஓஷன் டிரீம்ஸ்’ இரவுக்குப் பிந்தைய அனுமதி, தனியார் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள், சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட உணவு ஆகியவற்றுடன் கூடிய இரண்டு நாள்கள் ஆடம்பரமாகத் தங்கும் அனுபவமாகும்.

