கர்ப்பமான மாணவிகளுக்கு 60 நாள் மகப்பேறு விடுப்பு வழங்க பல்கலைக்கழகம் முடிவு

கர்ப்பமான மாணவிகளுக்கு 60 நாள் மகப்பேறு விடுப்பு வழங்க பல்கலைக்கழகம் முடிவு

1 mins read
18e1c537-6b39-4fa0-91a7-7f83b2190a67
-

கேரளாவில் முதன்முறையாக பட்டக்கல்வி, பட்டக்கல்விக்குப் பிந்தைய மேற்படிப்பு பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பமான மாணவிகளுக்கு 60 நாள் மகப்பேறு விடுப்பு வழங்க மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.

அவர்கள் தங்கள் கல்வியை இடையூறின்றி தொடர இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

அந்தப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, மகப்பேற்றுக்கு முன்போ பின்போ மகப்பேறு விடுப்பை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், முதலாவது அல்லது இரண்டாவது கர்ப்பகாலத்தில் வழங்கப்படும் இந்த விடுப்பு, மேற்கல்வியைப் பயிலும் காலத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

பொது, சாதாரண விடுமுறைகளும் மகப்பேறு விடுப்பு காலத்தில் உள்ளடங்கும் என்று கூறிய அப்பல்கலைக்கழகம், வேறெந்த விடுப்பையும் இதில் சேர்த்துக்கொள்ள முடியாது என்றது.

கர்ப்பமான மாணவிகள் மகப்பேறு விடுப்பில் இருக்கும்போது அவர்களுடைய படிப்பு பாதிக்காமல் இருப்பதற்காக அவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், மகப்பேறு விடுப்பில் இருக்கும் மாணவிகளுக்கு ஆய்வகம் மற்றும் உயிரியல் தேர்வுகள் இருந்தால் அந்தந்த துறையின் தலைவர் அவர் தேர்வு எழுத சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருக்கலைப்பு செய்துகொள்ளும்போது மாணவியருக்கு 14 நாள் விடுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மகப்பேறு விடுப்பை எடுத்துக்கொள்ள, பதிவுசெய்ய மருத்துவரின் மருத்துவச் சான்றிதழை மாணவியர் வழங்க வேண்டும். அதோடு, விடுப்பில் செல்வதற்கு முன்பு நாள்களுக்கு முன்பு விண்ணப்பத்தையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.