மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த வாரம் சென்னை வருகிறார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த வாரம் சென்னை வருகிறார்

1 mins read
c95461c4-7be0-4e70-bf9e-2a317501e92e
உள்துறை அமைச்சர் அமித் ஷா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்மாதம் 31ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார்.

முன்னாள் துணை அதிபர் வெங்கையா நாயுடு பேத்தி திருமண வரவேற்பு விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சமுத்திரா அரங்கில் நடக்கிறது. இந்த திருமண விழாவில் அமித்ஷா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

தமிழக பா.ஜ.க.வில் புதிய மாவட்ட தலைவர்கள் முதல் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் 33 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர். நேற்று 20 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.

புதிய மாநிலத் தலைவருக்கான தேர்வும் நடந்து வருகிறது. தேர்தல் பார்வையாளரான மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அடுத்த வாரம் வருகிறார். அப்போது மாநிலத் தலைவரும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்