பல வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா அடுத்தடுத்து முத்திரை பதிக்கும்: பியூஷ் கோயல்

பல வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா அடுத்தடுத்து முத்திரை பதிக்கும்: பியூஷ் கோயல்

1 mins read
6856883d-bcb7-4657-adce-7a3e0305a2be
பியூஷ் கோயல். - படம்: தினமலர்

புதுடெல்லி: அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்தாகி, ஏப்ரல் முதல் செயல்பாட்டுக்கு வரும் என இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பல வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா அடுத்தடுத்து முத்திரை பதிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரிட்டன், ஒமான் நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள முயற்சி மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இந்த ஒப்பந்தங்களும் செயல்படுத்தப்படும் என்றார்.

இந்தியா தற்போது சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த 25 ஆண்டுகளில் வேகமாக வளரும் பெரிய பொருளியல் நாடாக இந்தியா உருவெடுப்பதில் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கும் என்றார்.

இந்தியா மிக விரைவாக மாற்றம் கண்டுவருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாட்டில் உள்ள சிறு, குறு நிறுவனங்களின் முன்னேற்றத்தை உறுதிசெய்ய வேண்டும் என்றார்.

பிப்ரவரி 23ஆம் தேதி இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற உள்ளது.

மூன்று நாள்கள் நீடிக்கும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது வர்த்தக ஒப்பந்தத்திற்கு இறுதிவடிவம் கொடுக்கப்படும் என்றும் பியூஷ் கோயல் கூறினார்.

இதனிடையே, வர்த்தக ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன், மார்ச் மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்