பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது: நரேந்திர மோடி

பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது: நரேந்திர மோடி

2 mins read
dc96e1e8-c8c8-4d82-9c2b-bb4ffa2ed2d6
இஸ்ரேல் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, பிப்ரவரி 25ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அவர் உரையாற்றியபின், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

புதுடெல்லி: இஸ்ரேல் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அந்த உரையில், “பயங்கரவாதத்தை யாராலும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது,” என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை டெல் அவிவ் விமான நிலையத்தில் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உற்சாகமாக வரவேற்றார். அங்கு இரு நாட்டு தேசிய கீதங்​களை​யும் ராணுவ இசைக்குழு​வினர் இசைத்​தனர். பின்​னர், இருவரும் நாடாளு​மன்​றத்​துக்குச் சென்​றனர். இஸ்​ரேல் நாடாளு​மன்​றத்தில் இந்தியப் பிரதமர் மோடி சிறப்​புரை​யாற்​றி​னார்.

பிரதமர் நெட்டன்​யாகு பேசுகை​யில், ‘‘இஸ்​ரேலின் சிறந்த நட்பு நாடு இந்​தி​யா. இந்​தி​யா​வும் இஸ்​ரேலும் சகோதர நாடு​கள். பிரதமர் மோடி இஸ்​ரேல் வந்​துள்​ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்​கிறது. இந்​தி​யா​வும் இஸ்​ரேலும் தங்​கள் உறவை வலுப்​படுத்தி வரு​கின்​றன.

“மோடியைக் கட்​டிப்​பிடித்து வரவேற்​பது உண்​மை​யிலேயே மிகச் சிறப்​பானது. இரு நாடு​கள் இடையே​யான வர்த்​தகம் இரு மடங்கு அதி​கரித்​துள்​ளது. ஒத்​துழைப்பு 3 மடங்கு அதி​கரித்​துள்​ளது. புரிதல் 4 மடங்கு அதி​கரித்​துள்​ளது. இஸ்​ரேலுக்கு ஆதர​வாக பிரதமர் மோடி உள்​ளார். இந்​தி​யா​வும் இஸ்​ரேலும் பல நல்ல விஷ​யங்​களை பகிர்ந்துகொள்​கின்​றன. யூதர்​களுக்கு இந்​தி​யா​வில் வரவேற்பு அளிக்​கப்​படு​கிறது. இந்​தியா ஒரு சக்​தி​வாய்ந்த நாடு,” என்​றார்.

மோடி பேசுகையில், “அக்​டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்​திய தாக்​குதலில் உங்​கள் வேதனையை உணர்கிறேன். மும்பை பயங்கரவாதத் தாக்​குதலும், இஸ்​ரேலில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்​குதலும் ஒன்​று​தான். பொது​மக்​களைக் கொல்​வதை ஒருபோதும் யாராலும் நியாயப்​படுத்த முடி​யாது. பயங்கர​வாதம் அமை​தி​யைக் கெடுக்​கிறது.

“சமூகத்தை அழிப்​பது​தான் பயங்கரவாதத்​தின் நோக்​கம். பயங்கரவாதத்​தில் இரட்டை நிலை இருக்க முடி​யாது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இஸ்​ரேலுக்கு ஆதர​வாக இந்​தியா உள்​ளது. இப்​பகு​தி​யில் நிலை​யான அமைதி நிலவ வேண்​டும் என இந்​தியா விரும்​பு​கிறது. பாலஸ்​தீனப் பிரச்​சினைக்​குத் தீர்வுகாண வேண்​டிய நேரம் வந்​துள்​ளது. அமை​திக்​கான பேச்​சு​வார்த்​தையைத் தொடங்க வேண்​டும் என இந்​தியா வலி​யுறுத்​துகிறது.

இந்​தி​யா​வில் யூதர்​கள் அச்​சமின்றி வசிக்​கின்​றனர். யூதர்​களின் தாய்​நா​டாக இந்​தியா உள்​ளது. நமது உறவு ரத்​தம் மற்​றும் தியாகத்​தால் எழுதப்​பட்​டுள்​ளது. தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்தை செயல்​படுத்​து​வது குறித்து இந்​தி​யா​வும் இஸ்​ரேலும் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​வதாக பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவின் வான்வெளிப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘சுதர்சனச் சக்கரம்’ ஆயுதத் தயாரிப்பில் ஒருங்கிணைந்து செயல்படுவது, இஸ்ரேலின் வான் பாதுகாப்புக் கருவியான அயர்ன்டோம் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை அளிப்பது குறித்தும் இரு நாட்டு பிரதமர்கள் ஆலோசனை நடத்தினர்.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பின்னர் பிரதமர் மோடிக்கு, அங்கு வாழும் இந்தியர்கள் ஜெருசலேமில் உள்ள கிங் டேவிட் ஹோட்டலில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்