முன்னாள் துணை அதிபரின் மூன்று புத்தகங்களை வெளியிட்ட பிரதமர் மோடி

முன்னாள் துணை அதிபரின் மூன்று புத்தகங்களை வெளியிட்ட பிரதமர் மோடி

1 mins read
b60d1f57-cd89-424e-a598-4a9c4cb8704f
முன்னாள் துணை அதிபர் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை மற்றும் பயணம் குறித்த மூன்று புத்தகங்களைப் பிரதமர் நரேந்திர மோடி காணொளிச் சந்திப்பின் மூலம் வெளியிட்டார். - படம்: பிடிஐ புகைப்படம்
Google News Preferred Icon

ஹைதராபாத்: முன்னாள் துணை அதிபர் வெங்கையா நாயுடுவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை மற்றும் பயணம் குறித்த மூன்று புத்தகங்களைப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

டெல்லியில் இருந்து காணொளிச் சந்திப்பு மூலம் புத்தகங்களை வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “புத்தகங்களை வெளியிடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் முன்னாள் துணை அதிபரின் வாழ்க்கை வரலாறு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும்,” என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும், நாயுடுவிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை தாம் உட்பட ஆயிரக்கணக்கான கட்சியினர் பெற்றுள்ளதாகவும் மோடி கூறினார்.

ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடுவுடன் பல தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்
துணைஅதிபர்பிரதமர்