பெங்களூர்: அமேசான் பார்சலில் வந்த நல்ல பாம்பு

பெங்களூர்: அமேசான் பார்சலில் வந்த நல்ல பாம்பு

1 mins read
47ba56ae-d73d-4d7c-b485-76fdeb22393f
பிரிக்கப்பட்ட பார்சலில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் பாம்பு. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

பெங்களூரு: புகழ்பெற்ற இணைய வர்த்தகத் தளமான அமேசானில் ‘எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோல்’ தருவித்தவருக்கு வந்த பார்சலை, கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஆசையுடன் பிரித்துப் பார்த்தனர். அப்போது உள்ளேயிருந்து ஒரு நல்ல பாம்பு தலையை நீட்டிப் பார்த்தது. அதைக் கண்டு அதிர்ந்துபோன அவர்கள் ஒரே ஓட்டமாக ஓடிப் போய்விட்டனர்.

பின்னர் சற்று தூரம் தள்ளி நின்று அந்தப் பாம்பு பார்சலில் இருந்து வெளியில் வர முயற்சி செய்ததைப் பார்த்தனர். ஆனால், அந்தப் பார்சலில் ஒட்டப்பட்டிருந்த டேப்பில் அந்தப் பாம்பு சிக்கிக் கொண்டு வெளியில் வரமுடியாமல் தவித்தது. அந்தக் காட்சியை தம்பதியர் காணொளியாகப் படம்பிடித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டனர். அந்தக் காணொளி சமூக வலைத்தளப் பயனர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

இந்தக் காணொளி பரவிய நிலையில், அதை விற்பனை செய்த இணையத் தள நிறுவனம் அந்த வாடிக்கையாளருக்கு பதில் எழுதியுள்ளது.

அந்தப் பதிலில் “சிரமத்துக்கு வருந்துகிறோம். நாங்கள் அதை சரி பார்த்திருக்க வேண்டும். ஆர்டர் குறித்த விவரத்தை இந்த லிங்கில் பதிவேற்றவும். அப்டேட் உடன் எங்கள் குழு உங்களைத் தொடர்புகொள்ளும்,” என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் பெங்களூருவின் சர்ஜாபூர் சாலைப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு ஒன்றில் நிகழ்ந்தது.

குறிப்புச் சொற்கள்