புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட பிரசாரமும் வாக்களிப்பும் முடிந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
கட்டணம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதேபோல், மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்கிறது.
வழக்கம்போல் ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வரவேண்டிய கட்டண உயர்வு, தேர்தலை ஒட்டி இரண்டு மாதங்களுக்குப்பிறகு அமலுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

