புதுடெல்லி: வடமேற்கு மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத வெப்பநிலையால் புழுதி புயல்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று நாள்களில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஆகிய மாநிலங்களில் புழுதிப் புயல் வீசக்கூடும் எனவும் நிலையம் கூறியுள்ளது.
மேலும், இந்தப் புழுதிப் புயல், மழையின் தீவிரத்தைக் குறைக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
சுருன் பலோடி போன்ற இடங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியசைத் தாண்டியுள்ளது என்றும் மற்ற இடங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் தென்மேற்குப் பருவமழை இவ்வாண்டு ஜூன் 15ஆம் தேதிக்குள் தொடங்கும் என போபால் வானிலை ஆய்வு நிலைய அதிகாரி தெரிவித்தார்.
கேரளம், வடகிழக்குப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

