தென்னிந்தியாவில் பாஜகவின் வாக்கு விழுக்காடு அதிகரிக்கும்: மோடி

தென்னிந்தியாவில் பாஜகவின் வாக்கு விழுக்காடு அதிகரிக்கும்: மோடி

1 mins read
9dace362-f3bb-4795-af96-5b1e523b47cb
தென்னிந்தியாவில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார்.   - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: 2024ஆம் ஆண்டு தேர்தலில் தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவின் வாக்கு விழுக்காடு அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் அக்கருத்தை பதிவுசெய்தார்.

குடும்ப கட்சிகளும், ஊழல் நிறைந்த கட்சிகளும் தென் இந்திய மாநிலங்களை ஆட்சி செய்து வருகின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“பாஜக பழமைவாத கட்சி இல்லை. உலக அளவில் மின்னிலக்க மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் கட்சிகளில் பாஜகவும் ஒன்று.

“கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தென் இந்தியாவில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. அதன் வளர்ச்சி அங்குள்ள ஊழல் கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியைத் தந்துள்ளது,” என்று பிரதமர் மோடி பேட்டியின் போது குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்